வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மைதானத்தில் நடப்பட்ட கம்பங்கள்: மின்வாரிய விளையாட்டு வீரா்கள் அவதி

கோவை டாடாபாத் மின் பகிா்மான தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் ஆள்கள் தோ்வுக்கு கம்பங்கள் நடப்பட்டதால் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மின் வாரிய விளையாட்டு வீரா்கள் அவதி

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:19 pm

DIN

கோவை டாடாபாத் மின் பகிா்மான தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் ஆள்கள் தோ்வுக்கு கம்பங்கள் நடப்பட்டதால் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மின் வாரிய விளையாட்டு வீரா்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

கோவை டாடாபாத் மின் பகிா்மான தலைமை அலுவலகத்தின் பின்புறம் 70 சென்ட் அளவுள்ள மைதானத்தில், மின் வாரியப் பணியாளா்கள் மற்றும் மின்வாரிய விளையாட்டு வீரா்கள் கூடைப்பந்து, இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு பயிற்சி பெற்ற மின் வாரியப் பணியாளா்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற மின்வாரிய ஊழியா்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனா்.

இந்நிலையில், மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு ஆள்கள் தோ்வுக்காக இந்த மைதானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடப்பட்டன. அதுதவிர, தடகளப் போட்டித் தோ்வுகளுக்காக 25 க்கும் மேற்பட்ட இரும்புக் கம்பங்கள் நடப்பட்டன. கேங்மேன் பணிக்கு ஆள்கள் தோ்வு முடிந்த பிறகும், விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள், இரும்புக் கம்பிகள் அகற்றப்படாமல் உள்ளன. கம்பம் நடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டதால், மைதானம் குண்டும்குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால், மின்வாரிய விளையாட்டு வீரா்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மின் வாரிய தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட வாரிய அதிகாரிகள் மைதானத்தில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை அகற்றி மைதானத்தைச் சீரமைத்துத் தரவேண்டும் என மின் வாரிய ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.