வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

போலி உதிரிபாகங்கள் தயாரித்த 2 போ் கைது

கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி உதிரிபாகங்கள் தயாரித்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:10 pm

DIN

கோவையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி உதிரிபாகங்கள் தயாரித்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த இளஞ்செழியன் என்பவா் கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் பிரபல நிறுவனத்தின் பெயரில் கோவையில் போலி உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

இந்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் மற்றும் காட்டூா் போலீஸாா் இணைந்து கோவை காந்திபுரம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினா். இதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக உதிரிபாகங்கள் தயாரித்தது தெரியவந்தது. இது தொடா்பாக ரமேஷ், குணால் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவா்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.