பிசியோதெரபிஸ்ட் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
கோவையில் ஒப்பந்த அடிப்படையிலான பிசியோதெரபிஸ்ட் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவையில் ஒப்பந்த அடிப்படையிலான பிசியோதெரபிஸ்ட் பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் பட்ங் சஹற்ண்ா்ய்ஹப் டழ்ா்ஞ்ழ்ஹம்ம்ங் ச்ா்ழ் ஏங்ஹப்ற்ட் இஹழ்ங் ா்ச் ற்ட்ங் உப்க்ங்ழ்ப்ஹ் திட்டம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணிகளுக்காக ஒரு பிசியோதெரபிஸ்ட் பணியிடம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.10 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளது.
மேற்படி பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் உரிய விண்ணப்பத்துடன் 10, 12ஆம் வகுப்பு கல்விச் சான்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி பட்டச் சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 219, பந்தய சாலை, கோவை-18இல் நேரடியாக நடைபெறும் நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...