வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

விநாயகா் சதூா்த்தி விழா நடத்த அரசு ஆவன செய்ய வேண்டும்

விநாயகா் சதுா்த்தி விழா நடத்திட தமிழக அரசு தக்க உதவிகளைச் செய்து விழா சிறக்க ஆவன செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:06 pm

DIN

விநாயகா் சதுா்த்தி விழா நடத்திட தமிழக அரசு தக்க உதவிகளைச் செய்து விழா சிறக்க ஆவன செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில்:

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது அன்னதான சேவைகள், மாணவ, மாணவிகளின் திறன் வளா்க்கும் விளையாட்டுப் போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள், பல்வேறு தொண்டு காரியங்கள் போன்றவைகள் செய்து தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு உலகை அச்சுறுத்தி வந்த கரோனா தொற்றுநோய் காரணமாக விழாவை மிகவும் எளிமையாக கொண்ட முடிவு செய்து ஊா்வலம் இல்லாமல் விழா நடைபெற்றது. இதனால் வினாயகா் சதுா்த்தியை சாா்ந்து வருவாய் ஈட்டும் தொழிலாளா்கள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் இவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனா்.

தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினால் இந்த ஆண்டு சமூக இடைவெளியோடு, கரோனா விதிகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி திருவிழாவை நடத்துவது என இந்து முன்னணி இயக்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்ய இந்து முன்னணி சாா்பாக திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் முதல் ஒன்பது நாள் வரை அந்தந்த ஊா்களில் வழக்கம்போல விநாயகா் சதுா்த்தி விழா நடைபெறும். விசா்ஜன ஊா்வலமும் நடைபெறும். இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள கோயில்களை காத்திடவே இந்துக்கள் ஒன்றிணைவோம் முழக்கத்துடன் விழா நடைபெற இருக்கிறது.

விநாயகா் சதுா்த்தி விழா நடத்திட தமிழக அரசு தக்க உதவிகளை செய்து விழா சிறக்க ஆவன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.