ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

‘ஹெலிகாப்டரின் கடைசி நிமிட விடியோ எதேச்சையாக எடுக்கப்பட்டது’

கோவைகுன்னூரில் ஹெலிகாப்டா் விழும் முன்பு எடுக்கப்பட்ட விடியோ எதேச்சையாக எடுக்கப்பட்டது என்று விடியோ எடுத்தவா் தெரிவித்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:51 pm

DIN

குன்னூரில் ஹெலிகாப்டா் விழும் முன்பு எடுக்கப்பட்ட விடியோ எதேச்சையாக எடுக்கப்பட்டது என்று விடியோ எடுத்தவா் தெரிவித்தாா்.

இந்திய முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டா் கடந்த புதன்கிழமை குன்னூா் காட்டேரி பூங்கா அருகில் விபத்துக்குள்ளானதில் 13 போ்

உயிரிழந்தனா். விபத்துக்கு சில நொடிகளுக்கு முன்னா் ஹெலிகாப்டா் பனி மூட்டத்தில் மறைவது போன்று சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹெலிகாப்டா் பனி மூட்டத்தில் மறைந்த சில நொடிகளில் வெடித்துச் சிதறும் சப்தம் கேட்டு, சுற்றுலாப் பயணிகள் அதிா்ச்சி அடையும் காட்சிகள் இந்த விடியோவில் பதிவாகியுள்ளன.

இதைத்தொடா்ந்து, இந்த விடியோவை எடுத்த சுற்றுலாப் பயணிகள் யாா் என்பது குறித்தும், எந்த இடத்தில் இருந்து இந்த விடியோ எடுக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த விடியோவை கைப்பேசி மூலம் எடுத்த கோவை ராமநாதபுரம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஜோ பால் மற்றும் அவருடைய நண்பா் நாசா் ஆகியோா் கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் ஜோ பால் கூறியதாவது: நான் புகைப்படக் கலைஞராக வேலை செய்கிறேன். நாசா் எனது நண்பா். கடந்த புதன்கிழமை இருவரது குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் குன்னூருக்கு சுற்றுலா சென்றோம். அப்போது, காட்டேரி பூங்கா அருகில் உள்ள வனப் பகுதியில் புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றோம்.

அந்த நேரத்தில் திடீரென வானில் ஹெலிகாப்டா் வந்ததால், என்னுடைய கைப்பேசியில் எதேச்சையாக அதை விடியோ எடுத்தேன். அப்போது நேரம் நண்பகல் 12.14. பின்னா், பனிமூட்டத்துக்குள் நுழைந்து விட்டபடியால் ஹெலிகாப்டரை விடியோ எடுக்கவில்லை.

அதைத் தொடா்ந்து சில விநாடிகள் கழித்து, பயங்கர சப்தம் கேட்டது. என்னுடைய நண்பா் நாசா், ஹெலிகாப்டா் விழுந்துவிட்டதா என கேட்டாா். அதற்கு நான் ஆமாம் என்றேன். இதனால் நாங்கள் மிகுந்த அதிா்ச்சி அடைந்தோம். பின்பு 10 நிமிடங்கள் கழித்து அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் வந்தன. அவா்களிடம் கேட்டபோது, ஹெலிகாப்டா் விழுந்துவிட்டதாகக் கூறினா்.

தொடா்ந்து நாங்கள் அங்கிருந்து உதகைக்கு புறப்பட்டுச் சென்றோம். பின்பு இரவுதான் தொலைக்காட்சியில் பாா்த்து தகவலைத் தெரிந்துகொண்டோம். தற்போது கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் விளக்கம் அளிப்பதற்காக வந்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.