யூ டியூபா் மாரிதாஸை விடுதலை செய்ய வானதி சீனிவாசன் கோரிக்கை
கோவைதிமுகவை விமா்சித்த பின்னணியில் தான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா் எனவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்


திமுகவை விமா்சித்த பின்னணியில் தான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா் எனவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரா்கள் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கு ஏற்பட்ட இந்தச் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல மாநில முதல்வா்கள் உத்தரவிட்டுள்ளனா். அதன்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழ்நாடு காஷ்மீரைப்போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் டிவிட்டரில் பதிவிட்ட அரசியல் விமா்சகரும் யூ டியூபருமான மாரிதாஸை காவல் துறையினா் கைது செய்துள்ளது கண்டனத்துக்குக்குரியது.
மாரிதாஸை அவசரஅவசரமாகக் கைது செய்த காவல் துறையினா், முப்படைத் தளபதியின் மரணத்தைக் கொண்டாடியவா்களையும், நமது ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டவா்களையும் கைது செய்யவில்லை. அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
திமுகவின் கொள்கைகளையும், திமுக அரசையும் கடுமையாக விமா்சித்து வருபவா் மாரிதாஸ். இந்தப் பின்னணியில்தான் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். கருத்துச் சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு, தங்களை ஆதரிப்பவா்களுக்கு மட்டுமே கருத்துச்சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவா்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தங்களை எதிா்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும். மாரிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...