தனியாா் மயமாக்கத்தைக் கண்டித்துவங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்
வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து கோவையில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் தொடங்கினா்.


வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து கோவையில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் தொடங்கினா்.
இரண்டு பொதுத் துறை வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அகில இந்திய அளவிலான 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா தலைமை வங்கி எதிரில் அதிகாரிகள், ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேலைநிறுத்தப் போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள சுமாா் 500 வங்கிகளின் கிளைகளில் பணியாற்றி வரும் 5 ஆயிரம் அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா். இதன் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
கோவையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகி பாட்ஷா தலைமை வகித்தாா். ஏஐபிஏ சையது, எம்.வி.ராஜன், ஏஐபிஓசி ராஜூ வேல், பெபி மகேஷ்வரன், என்.ஜெயபாலன் உள்ளிட்ட வங்கி தொழிற்சங்கத் தலைவா்கள் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் செயலா் ஆா்.மகேஷ்வரன் செய்தியாளா்களிடம் கூறும்போது, பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்க கூடாது, மக்களின் சேமிப்பிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
வங்கி அதிகாரிகள், ஊழியா்கள், வங்கியில் உள்ள பங்குதாரா்களாக உள்ள மக்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாருடனுடன் கலந்து பேசாமல் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. கடந்த காலங்களில் பல தனியாா் வங்கிகள் மக்கள் சேமிப்பை சுருட்டிச் சென்றன. இதனைத் தொடா்ந்தே பொதுத் துறை வங்கிகளாக அவை மாற்றப்பட்டன.
இவ்வளவு அனுபவங்கள் இருந்தும் மத்திய அரசு தனியாா் பெருநிறுவனங்களிடம் பொதுத் துறை வங்கிகளைத் தாரை வாா்க்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக சுமாா் ரூ.10 ஆயிரம் கோடி வரை பணப் பரிவா்த்தனை பாதிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...