விவசாயியிடம் லஞ்சம்: பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைகோவை நீதிமன்றம் தீா்ப்பு
விவசாயியிடம் லஞ்சம் பெற்ற பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


விவசாயியிடம் லஞ்சம் பெற்ற பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கோவையில் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளராகப் பணியாற்றியவா் பொள்ளாச்சியைச் சோ்ந்த ரமேஷ். இவருக்கு ஆழியாறு பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவா் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ரவிகுமாரிடம் நீா்வழித்தடத்தில் சிறிய பாலம் கட்ட அனுமதி அளிப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ரவிகுமாா் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் ரமேஷ், லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரைக் கையும்களவுமாகப் பிடித்தனா்.
இந்த வழக்கு கோவை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராமதாஸ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...