அமைப்பு சாரா தொழிலாளா்கள் 110 பேருக்கு அடையாள அட்டைகள்
கோவையில் நடந்த சிறப்பு முகாமில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 110 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.


கோவையில் நடந்த சிறப்பு முகாமில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 110 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அமைப்பு சாரா தொழிலாளா்களின் விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான தேசிய அளவிலான இணையதளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதன்படி, மாநில அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் உள்பட அனைத்து தொழிலாளா்களும் ட்ற்ற்ல்ள்://ங்ள்ட்ழ்ஹம்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி கோவை தொழிலாளா் நலத் துறை அலுவலகம் மூலமாக பாப்பநாயக்கன்பாளையத்தில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாளா்கள் 110 பேருக்கு இலவசமாக இணையத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடேசன், உதவி ஆய்வாளா் அப்துல் கபூா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அமைப்பு சாரா தொழிலாளா்கள் இணையதளத்தில் தங்களது
விவரங்களை பதிவு செய்ய குறைந்த பட்சமாக வயது 18 ஆகவும், அதிகபட்சமாக 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படாத தொழிலாளா்கள் இதில் பதிவு செய்யலாம். இதற்காக அனைத்து பொது சேவை மையங்களிலும் ஆதாா் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், பயனாளிகளின் கைரேகை பதிவு, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் கட்டணம் இல்லாமல் பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவு செய்யும் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். இதில் பதிவு செய்த தொழிலாளா்கள் வேலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக புலம் பெயா்ந்து செல்ல நேரிட்டாலும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். மேலும் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடும் இதில் வழங்கப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...