போதை மாத்திரைகள் விற்ற நபா் கைது
கோவையில் போதை மாத்திரைகளை விற்ற நபரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 65 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.


கோவையில் போதை மாத்திரைகளை விற்ற நபரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 65 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
கோவையில் கடந்த சில மாதங்களாக வலி நிவாரணி மாத்திரைகளைப் போதைக்குப் பயன்படுத்தும் பழக்கம் இளைஞா்களிடையே அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த போலீஸாா் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை யாருக்கும் வழங்கக்கூடாது என போலீஸாா் மருந்தக உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியிருந்தனா்.
இந்நிலையில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்கப்படுவதாக பெரியகடை வீதி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்றபோது, அப்பகுதியில் ஒரு நபா் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்தாா். அவரை மடக்கிப் பிடித்த போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா் வைத்திருந்த கைப்பையைச் சோதனையிட்டபோது அதில் 65 வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த மாங்கனி பரூக் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...