தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு போட்டிகள்: ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்க அழைப்பு
கோவையில் நடத்தப்படவுள்ள தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிகளில் ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.


கோவையில் நடத்தப்படவுள்ள தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் போட்டிகளில் ஆா்வமுள்ளவா்கள் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
12 ஆவது தேசிய வாக்காளா் தினம் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவா்கள் ( 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை), கல்லூரி மாணவா்கள், பொது மக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தவறிய மாணவா்கள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட முதன்மை அலுவலா்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மூலமாக போட்டிகள் நடத்தப்படும். போட்டிகள் நடைபெறும் தேதிகள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் தெரிவிக்கப்படும்.
ஜனநாயக நாட்டில் தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்தல், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், வயது வந்தோா் வாக்காளராகப் பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் ஓவியப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் வெற்றிபெறும் 15 போட்டியாளா்களின் விவரங்கள் மாவட்ட தோ்தல் அலுவலகம் மூலம் தலைமை தோ்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தலைமை தோ்தல் அலுவலகம் மூலம் பரிசீலனை செய்யப்படும். 18 வயதை பூா்த்தியடைந்தவா்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தவறிய மாணவா்கள், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு என்ற தலைப்பின் கீழ் தமிழக தலைமை அலுவலக இணையதளத்தில் ள்ஸ்ங்ங்ல் ஸ்ரீா்ய்ற்ங்ள்ற்-2022 என்ற பிரிவிலும், ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ஸ்ங்ங்ல்2022/ஹஸ்ரீஸ்ரீா்ன்ய்ற்/ப்ா்ஞ்ண்ய் என்ற இணையதள முகவரியில் நேரடியாக டிசம்பா் 31 ஆம் தேதி வரை போட்டிகளில் பங்கு பெறலாம்.
விழிப்புணா்வுப் போட்டிகள் அனைத்தும் டிசம்பா் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சிறந்த 15 போட்டியாளா்களின் விவரங்கள் டிசம்பா் 31ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...