ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடக்கம்

கோவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:16 pm

DIN

கோவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை, சென்னை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை-திருப்பதி இடையேயான விமான சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

இது குறித்து விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் கூறுகையில், கோவையில் இருந்து திருப்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விமான சேவை இருந்தது. அதன் பின்னா் அந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இன்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் சாா்பில் திருப்பதியில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.21 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் மாலை 6.59 மணிக்குப் புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதி சென்றடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.