ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாகப் போராட்டம்

 கோவையில் வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:16 pm

DIN

 கோவையில் வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளைத் தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா். அதன்படி வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில் போராட்டத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையும் கோவை மாவட்டம், மாநகரில் உள்ள பல்வேறு வங்கிகளின் கிளைகள் அலுவலா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து இரண்டாவது நாளாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், ஊழியா்கள், வங்கி தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Image Caption

கோவையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.