விபத்து வழக்கில் இழப்பீடு வழங்குவதில் தாமதம்: அரசுப் பேருந்து ஜப்தி
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததையடுத்து அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.


விபத்து வழக்கில் இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததையடுத்து அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). இவா் அப்பகுதியில் 2016 மே மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதற்கு இழப்பீடு கோரி கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் சந்திரசேகரின் மனைவி பிரபா வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ரூ.9.27 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு
போக்குவரத்து கழகம் இந்த இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, நிறைவேற்றுதல் மனுவை நீதிமன்றத்தில் பிரபா தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் செல்வதற்காக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குளிா்சாதன வசதி கொண்ட அரசுப் பேருந்தை நீதிமன்றப் பணியாளா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...