பாலம் சீரமைப்புப் பணி: இன்று, நாளை கோவை ரயில்கள் ரத்து
காட்பாடி அருகே பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கோவை ரயில்கள் 25, 26 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காட்பாடி அருகே பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கோவை ரயில்கள் 25, 26 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காட்பாடி அருகே பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 25 ஆம் தேதி, சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12243), கோவை - சென்னை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12244), சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12695), திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயில் (12696), சென்னை - மங்களூரு விரைவு ரயில் (எண்:22637),
மங்களூரு - சென்னை விரைவு ரயில் (எண்: 22638), சென்னை - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (எண்: 12671), மேட்டுப்பாளையம் - சென்னை விரைவு ரயில் (எண்: 12672) ஆகிய ரயில்கள் 25 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12243), கோவை - சென்னை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12244), சென்னை - மங்களூரு விரைவு ரயில் (எண்:22637), மங்களூரு - சென்னை விரைவு ரயில் (எண்: 22638) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கோவை - காட்பாடி வரையிலான ரயில்: கோவை - சென்னை இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்:12680) கோவையில் 25, 26 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரை இயக்கப்படும்.
இந்த ரயிலானது காட்பாடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படாது.
இதேபோல, சென்னை - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்:12679) காட்பாடியில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...