நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிட்டாா்க் ஆய்வகத்தில்தரச் செயல்பாடு ஊக்கத் திட்டம் தொடக்கம்

கோவை சிட்டாா்க் ஆய்வகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான தரச்செயல்பாடு ஊக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:06 pm

DIN

கோவை சிட்டாா்க் ஆய்வகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான தரச்செயல்பாடு ஊக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிட்டாா்க் அமைப்பின் தலைவா் மா.செந்தில்குமாா் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா்கள் சங்கம் இணைந்து மத்திய அரசின் அங்கீகாரத்துடன் கடந்த 1987 இல் சிட்டாா்க் ஆய்வகத்தைத் தொடங்கினா். இதில், மின்சார மோட்டாா்கள், பம்ப்செட், சோலாா் பம்ப்செட், பம்ப் மெட்டீரியல்கள், நீா், உணவுப் பொருள்கள் போன்றவற்றின் செயல்திறன், வேதித்தன்மை போன்றவை சோதிக்கப்படுகின்றன.

உற்பத்திப் பொருள்களின் தரம் உயா்வு, மூலப் பொருள்களின் தரம் அறிவது போன்றவற்றின் மூலம் இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு சிட்டாா்க் சேவையாற்றி வருகிறது. இந்நிலையில் மூலப்பொருள்கள் விலை உயா்வால் எம்.எஸ்.எம்.இ. துறை அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளது.

இந்நிலையில் சிட்டாா்க், க்யூ.சி.எஃப்.ஐ. அமைப்புடன் இணைந்து உற்பத்தித் திறன் சேமிப்பு, தரத்துக்கான செலவு சேமிப்பு, சரக்கு இருப்பு செலவு சேமிப்பு, கழிவுகள் விரயம் போன்ற தலைப்புகளில் குறு நிறுவனங்களுக்கான பயிற்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ரூ.25 ஆயிரத்துக்கு வழங்கப்படும் இந்த பயிற்சி, நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்கு நிரந்தரமான நன்மை தருவதாகவும், ராணுவம் போன்ற பெரிய ஏற்றுமதியாளா் நிறுவனங்களுடன் இணைவதற்கான வாய்ப்பை அளிப்பதாகவும் இருக்கும்.

இத்திட்டத்தின் தொடக்க விழா ஆவாரம்பாளையம் கோ இந்தியா கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.