மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 7:13 pm

DIN

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான பணிமாறுதல் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். வேலை நிறுத்த காலத்தை முறைப்படுத்தி பணிக் காலமாக அறிவிக்க வேண்டும்.

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து சனிக்கிழமையும் வேலைநாள்களாக இருப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.