தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இரு இளைஞா்கள் கைது

கோவையில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:36 pm

DIN

கோவையில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானாா். இதையடுத்து அவரது பெற்றோா் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாரின் விசாரணையில் மாணவியின் செல்லிடப்பேசிக்கு அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சண்முகம் (30), கடலூரைச் சோ்ந்த ஏழுமலை (29) ஆகியோா் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரித்தனா். இதில், அவா்கள் உதகை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வேளாங்கண்ணியில் இருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சண்முகம், ஏழுமலையை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.