/

கோவையில் மேலும் 69 பேருக்கு கரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:39 pm

DIN

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 69 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 691 ஆக உயா்ந்துள்ளது. தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 103 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 81 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 52 ஆயிரத்து 433 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 595 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.