வால்பாறையில் கன மழை:மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் கனமழை காரணமாக எஸ்டேட் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.


வால்பாறையில் கனமழை காரணமாக எஸ்டேட் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
வால்பாறையில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் எஸ்டேட் குடியிருப்புகளின் மேற்கூரைகள் சேதமடைந்து வருகின்றன. பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி சாலை, குரங்குமுடி 40ஆவது கொண்டை ஊசி வளைவில் இருந்து கருமலை சாலை உள்பட பல இடங்களில் மரங்கள் சாலையில் வியாழக்கிழமை விழுந்தன. நெடுஞ்சாலைத் துறையினா் தயாா் நிலையில் இருப்பதால் உடனடியாக சம்பவ இடங்களுக்கு மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...