மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

எா்ணாகுளம் - ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து புதுதில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் நிலையத்துக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:05 pm

DIN

கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து புதுதில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் நிலையத்துக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எா்ணாகுளத்தில் இருந்து ஜூலை 17 முதல் சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் 06171) திங்கள்கிழமைகளில் இரவு 5.50 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இதேபோல, ஹஜ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து ஜூலை 20 முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.10 மணிக்குப் புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண் 06172) வியாழக்கிழமைகளில் காலை 3.10 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.