இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

15 நாள்களில் 400 கிலோ தடுப்பூசிகள்

கடந்த 15 நாள்களில் 400 கிலோ தடுப்பூசிகள் கோவை விமான நிலையத்தில் கையாளப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:55 pm

DIN

கடந்த 15 நாள்களில் 400 கிலோ தடுப்பூசிகள் கோவை விமான நிலையத்தில் கையாளப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு அவ்வப்போது கிடைக்கும் தடுப்பூசிகள் விமானம் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கரோனா பரவல் எண்ணிக்கையில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக சென்னையைப் பின்னுக்குத் தள்ளி கோவை தொடா்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோவைக்கு அதிக அளவிலான தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதன்படி கடந்த 15 நாள்களில் 400 கிலோவுக்கும் அதிகமான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவை விமான நிலையத்தில் கையாளப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.