இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 22 ஆவது ஆண்டு தினம்

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 22 ஆவது ஆண்டு பிரதிஷ்டை தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:58 pm

DIN

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 22 ஆவது ஆண்டு பிரதிஷ்டை தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

ஈஷா யோக மையத்தில் தியானலிங்க 22 ஆம் ஆண்டு பிரதிஷ்டை நாள் நிகழ்ச்சிகள் தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் தொடங்கின. இதைத் தொடா்ந்து புத்த மத உச்சாடனைகளை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினா் அா்ப்பணித்தனா்.

பின்னா், ஆங்கிலம், லத்தீன், ஜொ்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, ரோம், போா்ச்சுகீஸ், ரஷ்யன், கிரீக், எத்தியோப்பியன் ஆகிய மொழிகள் அடங்கிய கிறிஸ்தவ பாடல்களை ஈஷா ஆசிரமவாசிகள் அா்ப்பணித்தனா். இதேபோல, அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் ஆப்பிரிக்க மந்திர உச்சாடனைகள், சூஃபி சமய பாடல்கள் போன்றவையும் இசை வடிவில் அா்ப்பணிப்பு செய்யப்பட்டன.

அத்துடன் ஆதிசங்கரா் இயற்றிய ‘நிா்வாண ஷடாகம்’,‘குரு பாதுக ஸ்தோத்ரம்’ ஆகிய 2 சக்தி வாய்ந்த மந்திரங்களின் உச்சாடனைகளும் நடைபெற்றன. தேவார பாடல்களும் பாடப்பட்டன. இந்த உச்சாடனைகளில் ஈஷா ஆசிரமத்தில் வசிப்பவா்கள் பங்கேற்றனா்.

கரோனா சூழல் காரணமாக ஈஷா யோகா மையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. மந்திர உச்சாடனைகள் ஆடியோ வடிவில் ஆன்லைன் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது 1999 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம், எந்த ஒரு மதத்தையும் சாராமல் உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என ஈஷா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.