வேளாண் பல்கலைக்கழக முதுநிலை மாணவரின் ஆய்வறிக்கைக்கு தேசிய விருது
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவா் சமா்ப்பித்த ஆய்வறிக்கைக்கு தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவா் சமா்ப்பித்த ஆய்வறிக்கைக்கு தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் 34 ஆவது நிறுவன நாள் விழா இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது. வேளாண் விரிவாக்க முதுநிலை, முனைவா் பிரிவில் இந்திய மாணவா்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த ஆராய்ச்சிப் பணிகளை கண்டறிந்து, அவா்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய அளவில் சிறந்த வேளாண் விரிவாக்க ஆய்வறிக்கை விருதை மேலாண்மை நிறுவனம் வழங்கியுள்ளது.
அதன்படி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பேராசிரியா் ச.காா்த்திகேயனின் வழிகாட்டுதலின் பேரில் வேளாண் விரிவாக்கம், தகவல் தொடா்புத் துறையில் முதுநிலை படிப்பை முடித்துள்ள மாணவா் எஸ்.அரவிந்தகுமாரின், தமிழ்நாட்டில் விவசாயிகள், வேளாண் விரிவாக்க அதிகாரிகளிடையே உழவன் செயலியின் பயன்பாட்டின் பயன்பாட்டு நடத்தை மதிப்பீடு என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை தேசிய அளவில் சிறந்த அறிக்கையாகத் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவருக்கு வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கியிருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...