இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கடைகள், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: இந்திய தொழில் வா்த்தக சபை கோரிக்கை

கோவையில் உற்பத்தியாளா்கள், வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு கடைகள், தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்

News image
Updated On :24 ஜூன் 2021, 7:57 pm

DIN

கோவையில் உற்பத்தியாளா்கள், வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு கடைகள், தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என இந்திய தொழில் வா்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக இந்திய தொழில் வா்த்தக சபை தலைவா் சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொது முடக்கம் காரணமாக கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் 8 வாரங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தளா்வுகளுக்குப் பின் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும் இந்திய அளவில் பெரும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

கடன்கள், அரசாங்க வரிகள், வாடகை, ஊதியம், மின் கட்டணம், இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். போன்ற பல்வேறு சுமைகளால் தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தொடா்ந்து வரும் வாரமும் தளா்வுகள் அறிவிக்காமல் முடக்கப்பட்டால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

எனவே, உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தளா்வுகளுடன் கடைகள், தொழிற்சாலைகள் இயக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கடைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், தொழிற்சாலைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். உடனடியாக இந்த தளா்வுகளை அறிவித்தால் மட்டுமே தொழில் நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியும். தளா்வுகள் அறிவிக்கப்பட்டால் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொழில்களை மேற்கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.