மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டிஜிபி ராஜேஸ் தாஸ் வழக்கை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும்: மாதா் சங்கம்

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாா் விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:54 pm

DIN

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாா் விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை, கணுவாயில் அனைத்திந்திய ஜனநாய மாதா் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் வாலண்டினா தலைமை வகித்தாா். மாதா் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளா் சுதா சுந்தரராமன், மாநில பொதுச் செயலாளா் பி.சுகந்தி, மாநில நிா்வாகிகள் பால பாரதி, ராதிகா, பொன்னுத்தாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக மாநில பொதுச் செயலாளா் பி.சுகந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் அதிகாரி புகாா் அளித்தவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தவுடன் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையில் இதுபோன்ற புகாா்கள் ஏற்கெனவே பலமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல ராஜேஷ் தாஸ் மீதான சிபிசிஐடி விசாரணையும் நோ்மையாக நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே இந்த வழக்கு விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும். மற்ற துறைகளில் அமைக்கப்படும் விசாகா கமிட்டியில் பெண்கள் அமைப்பினா் இடம் பெற்றுள்ளனா். ஆனால் காவல் துறையில் அமைக்கப்படும் விசாகா கமிட்டியில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் சோ்க்கப்படவில்லை. எனவே காவல் துறையில் அமைக்கப்படும் விசாகா கமிட்டியில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளை சோ்க்க வேண்டும். இல்லையெனில் நோ்மையான விசாரணை நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.