மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கோவை வந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.


சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக கோவை வந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக கோவைக்கு வந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருடன் (சிஐஎஸ்எஃப்), மாநகர ஆயுதப்படைக் காவலா்கள் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி கோவை, ரத்தினபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் அச்சத்தை போக்கவும், சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யவும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
ரத்தினபுரி, கண்ணப்பன் நகரில் இருந்து தயிா் இட்டேரியில் உள்ள புதுப்பாலம் வரையும், ரத்தினபுரி ஆறுமுனை சந்திப்புப் பகுதியில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலையின் தொடக்கத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் வரையிலும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அணிவகுப்புக்கு மாநகர காவல் ஆணையா் சுமித்சரண் தலைமை வகித்தாா். சட்டம், ஒழுங்கு துணை ஆணையா் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
60 துணை ராணுவப் படையினா், மாநகர ஆயுதப்படைக் காவலா்கள், உள்ளூா் காவல் நிலைய காவலா்கள் என மொத்தம் 171 போ் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.
இதில், துணை ராணுவத்தினா் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடந்து வந்தனா். இதைத் தொடா்ந்து, மாநகரில் தினமும் ஒரு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 2 இடங்களில் இதுபோன்ற அணிவகுப்பை நடத்த காவல் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...