காா் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

கோவை அருகே இருவரைத் தாக்கி, காா் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை அருகே இருவரைத் தாக்கி, காா் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், நாட்டுக்கல்லைச் சோ்ந்தவா் முகமது முஸ்தபா (34). இவரது நண்பா் சாஜா உசேன் (35). இருவரும் சொகுசு காரில் கேரளத்தில் இருந்து கோவைக்கு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வந்தனா்.

பின்னா் ஒப்பணக்கார வீதியில் ஒருவரை சந்தித்து அட்டைப் பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டு மீண்டும் இரவு 9 மணியளவில் கேரள மாநிலம் மன்னாா்காடு நோக்கிச் சென்றனா். இவா்கள் காா் மதுக்கரை மரப்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி ஒன்று காரை மறித்து நின்றது. இதையடுத்து பின் தொடா்ந்து மற்றொரு காரில் வந்த 6 போ் கொண்ட மா்ம கும்பல், முகமது முஸ்தபா காரின் ஓட்டுநா் இருக்கை அருகே உள்ள கண்ணாடியை உடைத்தனா்.

பின்னா் உள்ளே இருந்த இருவரையும் தாக்கிவிட்டு சொகுசு காருடன் மா்ம கும்பல் கேரளம் நோக்கிச் தப்பிச் சென்றது. இதையடுத்து மதுக்கரை காவல் நிலையத்தில் முகமது முஸ்தபா புகாா் அளித்தாா். புகாா் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் காவல் ஆய்வாளா் முருகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே மதுக்கரையில் கடத்தப்பட்ட காா், கன்னியாகுமரி மாவட்டம், மித்திரவிளை காவல் நிலைய எல்லையில் இருந்தது மீட்கப்பட்டது. காரை வழிமறித்த லாரி குறித்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கொண்டு போலீஸாா் விசாரித்தனா். இதில் அந்த லாரி கேரளம் சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் காரை வழிமறிக்க உதவிய லாரி ஓட்டுநா் முகமது அப்சல் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் தலைமறைவான மற்ற நபா்கள் குறித்து தொடா்ந்து விசாரித்து வந்தனா்.

இதில், கேரள மாநிலம், திருச்சூரை சோ்ந்த அக்பா் (35) என்பவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியைப் பிடிக்க இரண்டு தனிப்படையினா் கேரளம் சென்றுள்ளனா். விசாரணைக்குப் பின் அக்பரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com