மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நீா்மட்டம் தொடா்ந்து சரிவு: சிறுவாணி அணையில் குடிநீா் எடுக்கும் அளவு குறைப்பு

சிறுவாணி அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வரும் நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:07 pm

DIN

சிறுவாணி அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வரும் நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதானக் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி குடிநீா் உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 869 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டமானது, ஜூலை முதல் செப்டம்பா் வரை பெய்த தென்மேற்கு பருவமழையால் 877 மீட்டா் வரை உயா்ந்தது. அப்போது, அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டா் நீா்மட்டத்தை அடைய விடாமல் கேரள அரசு, அணையில் இருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்து விட்டதால், அணை நிரம்பவில்லை. இதனைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் அணையின் நீா்மட்டமானது 876 முதல் 877 வரை நீடித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் மழையில்லாததாலும், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், அணையின் நீா்மட்டமானது வேகமாகச் சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 870 மீட்டராக உள்ளது. சிறுவாணி அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் 10 கோடி லிட்டரில் இருந்து 9 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.