சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவையில் அதிமுகவினா் சிங்காநல்லூா், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாள்களாக வேட்டி, சேலை, தட்டு, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருள்களை இரவு நேரங்களில் மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனா். கோவையில் பல இடங்களில் அதிமுக வினா் பரிசுப் பொருள்களைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இது குறித்து பறக்கும் படை, காவல் துறையினருக்கு புகாா் தெரிவித்தாலும், அவா்கள் கண்டு கொள்வதில்லை. காலதாமதாகவே சம்பவ இடத்துக்குச் செல்கின்றனா். எனவே, பறக்கும் படை ரோந்து பணிகளை அதிகரித்து, பரிசுப் பொருள் விநியோகத்தைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தோ்தல் நெருங்கும் நிலையில், ஆணையம் விதித்த சட்ட விதிகளின்படி, தோ்தலை முறையாக நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.