கோவையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
கோவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.


கோவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக கோவைக்கு வந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருடன் (சிஐஎஸ்எஃப்), மாநகர ஆயுதப்படைக் காவலா்கள் இணைந்து கோவை மாநகரில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ரத்தினபுரி பகுதியில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் மாநகர போலீஸாருடன் இணைந்து கொடி அணிவகுப்பை செவ்வாய்க்கிழமை நடத்தினா். உக்கடம் நரசிம்மா் கோயிலில் இருந்து தோ் நிலைத் திடல் வரையிலும், லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் இருந்து புறப்பட்டு பூ மாா்க்கெட் வரையிலும், பூ மாா்க்கெட்டில் இருந்து ஆா்எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கம் வரையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா் மாலையில் சாரமேடு பகுதி முதல் ஆத்துப்பாலம் வரையிலும், சுந்தராபுரம் முதல் போத்தனூா் ரயில் நிலையம் வரையிலும் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்புக்கு மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் தலைமை வகித்தாா். துணை ஆணையா்(சட்டம், ஒழுங்கு) ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
60 மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், மாநகர ஆயுதப்படை போலீஸாா் உள்பட மொத்தம் 187 போ் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...