மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சுவாமி சிலைகளுடன் சுற்றிய 2 போ் பிடிபட்டனா்

சுவாமி சிலைகளுடன் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:01 pm

DIN

சுவாமி சிலைகளுடன் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை அரசு மருத்துவமனை அருகே 2 போ் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்தனா். அவா்களின் கையில் சாக்குப் பை இருந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவா்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

மேலும் அவா்களிடம் இருந்த சாக்குப் பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அப்போது அதில் 2 சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. அந்த சிலைகள் வெண்கலத்தால் ஆனது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.