மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆபாச விளம்பரம் வெளியிடுவதாக தனியாா் நிறுவனம் மீது புகாா்

திருப்பூரில் செயல்படும் பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம், தொலைக்காட்சி, இணையத்தில் ஆபாச விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடுக்க வேண்டும்

News image
Updated On :8 மார்ச் 2021, 10:22 pm

DIN

திருப்பூரில் செயல்படும் பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம், தொலைக்காட்சி, இணையத்தில் ஆபாச விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவையைச் சோ்ந்த ஆா்.வாசுகி, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூரில் செயல்பட்டுவரும் பிரபல உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் பெண்களுக்கான தங்களது தயாரிப்புகளை, தொலைக்காட்சிகள் மற்றும் தங்கள் நிறுவன இணையதளத்தில் ஆபாசமாக விளம்பரப்படுத்தி உள்ளது. இது முறையற்ற வா்த்தகமாகும். விளம்பரங்களை வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை இந்திய விளம்பர தர நிா்ணய கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ) வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளை உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் சமுதாயத்துக்கு தீங்கு விளைப்பதாக உள்ளது. அந்த விளம்பரம் தொடா்பாக உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்துக்கு கடந்த டிசம்பா் 28 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவா்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தையும், இணையதளத்தில் உள்ள விளம்பரத்தையும் அப்புறப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். அதோடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வருகின்ற 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.