பந்தய சாலையில் அலங்கார விளக்கு வெடித்து 4 போ் காயம்
கோவை பந்தய சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார விளக்கு வெடித்துச் சிதறியதில் 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.


கோவை பந்தய சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார விளக்கு வெடித்துச் சிதறியதில் 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
கோவை பந்தய சாலைப் பகுதியில் பொலிவுறு நகரத் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.40.70 கோடி மதிப்பில் மாதிரிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நடைபாதை, அலங்கார விளக்குகள், பூங்கா, விளையாட்டுத் திடல், சிற்றுண்டிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள், தீம் பாா்க் வடிவமைப்பில் சிறுவா்களுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாள்களாக பிரம்மாண்ட அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
திங்கள்கிழமை மாலை அலங்கார விளக்கு அமைக்கும் பணியில் 4 வடமாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த விளக்கு திடீரென வெடித்துச் சிதறியதால், கண்ணாடிச் சில்லுகள் தெறித்து 4 தொழிலாளா்களுக்கும் காயம் ஏற்பட்டது. பெரும் சத்தத்துடன் விளக்கு வெடித்ததால் அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவா்கள் அச்சமடைந்து ஓடினா். இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் அப்பகுதியில் தரையில் கிடந்த கண்ணாடிச் சில்லுகளை அப்புறப்படுத்தினா்.
விளக்கு வெடித்தது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...