மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெண் நிா்வாகி வீட்டில்பரிசுப் பொருள்கள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் அதிமுக பெண் நிா்வாகி வீட்டில் இருந்த பரிசுப் பொருள்களைத் தோ்தல் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:18 pm

DIN

ராமநாதபுரத்தில் அதிமுக பெண் நிா்வாகி வீட்டில் இருந்த பரிசுப் பொருள்களைத் தோ்தல் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனால் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விதிமீறல் குறித்து கண்காணிக்கப்பட்டு, பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை, ராமநாதபுரம் பாரதி நகா் 6 ஆவது வீதியில் உள்ள அதிமுக வாக்குச் சாவடி முகவா் அனிதா வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை தெற்குத் தொகுதி பறக்கும் படை அதிகாரி சந்திரபிரியா தலைமையிலான தோ்தல் அலுவலா்கள், சம்பந்தப்பட்ட பெண் நிா்வாகி வீட்டில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 68 பைகளில் வேட்டி, சேலை, தட்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோவை தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.