தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடிநீா்த் திட்ட அபிவிருத்திப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

கோவையில் குடிநீா்த் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை மாநகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:56 pm

DIN

கோவையில் குடிநீா்த் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை மாநகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, துடியலூா், கணபதி பகுதி வி.ஜி.ராவ் நகா், வரதராஜூலு நகா் ஆகிய பகுதிகளில் நீண்ட நாள்களாக குடிநீா்ப் பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதிகளில் குடிநீா் அபிவிருத்திப் பணிகள் மேற்கொண்டு, சீரான குடிநீா் விநியோகிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குடிநீா் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், செயற்பொறியாளா் பாா்வதி ( 24 மணி நேரக் குடிநீா்த் திட்டம்), உதவி செயற்பொறியாளா் செந்தில் பாஸ்கா், திட்ட மேலாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.