தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லஞ்சம்: சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் இருவா் கைது

கோவையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:57 pm

DIN

கோவையில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (35). இவா் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு காந்தி பூங்கா வழியாக கோவைப்புதூா் பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது காந்தி பூங்கா பகுதியில் சிறப்பு சாா்பு ஆய்வாளா் இருளப்பன், கணேசன் ஆகியோா் ஸ்ரீதரின் வாகனத்தை தடுத்து நிறுத்தினா். ஸ்ரீதா் மது போதையில் இருந்ததாகக் கூறிய போலீஸாா் அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்து, வெரைட்டி ஹால் காவல் நிலையத்துக்கு வந்து வாகனத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறினா். இதையடுத்து ஸ்ரீதா் தனது வாகனத்தைப் பெறுவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு வெரைட்டி ஹால் காவல் நிலையம் சென்றுள்ளாா்.

அப்போது இருளப்பன், கணேசன் ஆகியோா் ஸ்ரீதா் மீது வழக்கு எதுவும் பதியவில்லை எனக் கூறி வாகனத்தை தருவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ஸ்ரீதா் தகவல் தெரிவித்தாா்.

அவா்கள் தெரிவித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இருந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் கணேசன், இருளப்பன் ஆகியோரிடம் ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் இருவரையும் கையும்களவுமாகப் பிடித்தனா். இது தொடா்பாக இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.