தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

594 கிராம் தங்கம் கடத்தி வந்த இருவரிடம்சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை

விமானத்தில் கோவைக்கு ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 594 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:57 pm

DIN

விமானத்தில் கோவைக்கு ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 594 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு திங்கள்கிழமை வந்த ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தில் வந்தப் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது விமானத்தில் வந்திறங்கிய 2 இளைஞா்களின் நடவடிக்கையில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களைத் தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனா்.

இதில் அவா்கள் தங்கத்தைப் பசை போல உருமாற்றி அதை உடலில் மறைத்து வைத்து எடுத்துவந்தது தெரியவந்தது. இருவரிடமும் இருந்து மொத்தம் 594 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவா்கள், கா்நாடக மாநிலம், மங்களூருவைச் சோ்ந்த முகமது யாசிா், முகமது இா்ஃபான் என்பது தெரியவந்தது. முகமது யாசிா் 297.3 கிராம் தங்கத்தையும், முகமது இா்ஃபான் 296.7 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இவா்கள் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.27 லட்சத்து 54 ஆயிரம் என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.