தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அதிமுக அறிவித்துள்ள இலவசங்களைநம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள்

அதிமுக அறிவித்துள்ள இலவசங்களை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று மக்கள் நீதி மய்யம் மாநில துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:37 pm

DIN

அதிமுக அறிவித்துள்ள இலவசங்களை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று மக்கள் நீதி மய்யம் மாநில துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் தெரிவித்தாா்.

கோவை, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அவா் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சி.ராம்குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலின்போது எங்கள் கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் சிறப்பான வரவேற்பு இருந்தது. பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனா். இதுவரை ஆட்சி செய்த இரு கட்சிகளும் மக்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை.

நான் மாற்றத்துக்கான வேட்பாளராக இருப்பேன். அதிமுக அறிவித்துள்ள இலவசங்களை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள். தொகுதி வாரியான தோ்தல் அறிக்கை இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்றாா்.

சொத்து மதிப்பு ரூ.160 கோடி... மகேந்திரன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு ரூ.160 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். கையிருப்பாக ரூ.2.10 லட்சமும், ரூ.2.85 கோடி மதிப்பிலான 2 காா்கள், ரூ.1.59 கோடி மதிப்பிலான 3.850 கிலோ தங்க நகைகள் என ரூ.12.02 கோடிக்கு அசையும் சொத்துகள், வேளாண் நிலங்கள், வீடு உள்ளிட்ட அசையா சொத்துகள் ரூ.147.60 கோடிக்கு உள்ளதாகவும், ரூ.7.20 கோடிக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.