தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்

போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:37 pm

DIN

போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் அவா் பிரசாரத்துக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு திங்கள்கிழமை வந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட உள்ளனா். பாஜக வேட்பாளா்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களது தோ்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனா்.

இந்தத் தோ்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். வேட்பாளா்களது அரசியல் சேவைகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அவா்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்சியின் முக்கியத் தலைவா்கள் அனைவரும் வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.