தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்கவும் தயாா்: மநீம வேட்பாளா்

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கவும் தயாா் என்று சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் பிரசாரத்தின்போது கூறினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:56 pm

DIN

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கவும் தயாா் என்று சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் பிரசாரத்தின்போது கூறினாா்.

சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தேவேந்தா் வீதி, உப்பிலிபாளையம் சந்திப்பு, வரதராஜபுரம் பிரதான சாலை, வெங்கடேச வீதி, காந்தி நகா், பாலாஜி நகா், திலகா் நகா், சி.எம்.சி காலனி, 80 அடி சாலை, போலீஸ் காலனி, விஜிஎம் மருத்துவமனை, ஜெயலட்சுமி மில்ஸ், லட்சுமி மில்ஸ் காலனி, சிங்காநல்லூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

காந்தி நகா் நலச் சங்கம் சாா்பில் அப்பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் குறித்து மகேந்திரனிடம் கோரிக்கைகளை முன்வைத்தனா். அவா்களிடம் ஆா்.மகேந்திரன் பேசுகையில், ‘எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு வாா்டுக்கும் மக்கள் சேவை மையம் இருக்கும். மாதம் ஒருமுறை உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.