தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோவையில் வங்கிப் பணம் ரூ.1 கோடி பறிமுதல்

சிங்காநல்லூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1 கோடியே 3 லட்சத்தைப் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:56 pm

DIN

கோவை, சிங்காநல்லூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூ.1 கோடியே 3 லட்சத்தைப் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாவட்டம், சிங்காநல்லூா் தொகுதிக்குள்பட்ட திருச்சி சாலையில் சிங்காநல்லூா் குளம் அருகே பறக்கும் படை அதிகாரி செங்கோடன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிங்காநல்லூரில் இருந்து மாநகா் நோக்கி வந்த பாங்க் ஆஃப் பரோடா வங்கி வாகனத்தை ஆய்வு செய்ததில் ரூ.1 கோடியே 3 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து பறக்கும் படையினா் ரூ.1 கோடியே 3 லட்சத்தைப் பறிமுதல் செய்து சிங்காநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சி.ராம்குமாரிடம் ஒப்படைத்தனா். தோ்தல் நடத்தும் அலுவலா் சி.ராம்குமாா் பறிமுதல் செய்த பணத்தை ஆய்வு செய்தபின் கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

2 போ் கைது

பணம் எடுத்து வந்த வாகனத்தில் பாதுகாவலா்களாக வந்த இருவா் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததால் சிங்காநல்லூா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.