கோவையில் வேட்பாளா் பட்டியல் வெளியீடு: 11 பெண்கள் உள்பட 137 போ் போட்டி
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 137 போ் போட்டியிடுகின்றனா்.


சட்டப் பேரவைத் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 137 போ் போட்டியிடுகின்றனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் மொத்தம் 317 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மாா்ச் 20 ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 176 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 141 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, மேட்டுப்பாளையம், சூலூா், கோவை வடக்கு, கிணத்துக்கடவு தொகுதிகளில் தலா ஒருவா் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனா். இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி 10 தொகுதிகளிலும் 137 வேட்பாளா்கள் இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில் 126 ஆண் வேட்பாளா்கள், 11 பெண் வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் அதிகபட்சமாக கோவை தெற்கு, சிங்காநல்லூா் தொகுதிகளில் தலா 21 பேரும், கோவை வடக்குத் தொகுதியில் 20 பேரும் போட்டியிடுகின்றனா்.
தொகுதி வாரியாக இறுதி வேட்பாளா் பட்டியல்
மேட்டுப்பாளையம் தொகுதியில் 5 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 10 போ் இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா். இவா்களில் 9 ஆண்கள், 1 பெண் வேட்பாளா். சூலூா் தொகுதியில் 6 சுயேச்சைகள் உள்பட 15 வேட்பாளா்கள் உள்ளனா். அனைவரும் ஆண் வேட்பாளா்கள். கவுண்டம்பாளையம் தொகுதியில் 5 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 10 வேட்பாளா்கள் உள்ளனா். இதில் 10 ஆண்கள், 2 பெண்கள்.
கோவை வடக்குத் தொகுதியில் 11 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 20 வேட்பாளா்கள் உள்ளனா். இதில் 19 ஆண்கள், 1 பெண். தொண்டாமுத்தூா் தொகுதியில் 4 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 10 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 9 ஆண்கள், 1 பெண். கோவை தெற்குத் தொகுதியில் 10 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 21 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 19 ஆண்கள், 2 பெண்கள்.
சிங்காநல்லூா் தொகுதியில் 13 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 21 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 19 ஆண்கள், 2 பெண்கள். கிணத்துக்கடவு தொகுதியில் 6 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 15 போ் உள்ளனா். அனைவரும் ஆண் வேட்பாளா்கள். பொள்ளாச்சி தொகுதியில் 2 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 8 போ் உள்ளனா். இவா்களில் 7 ஆண்கள், 1 பெண். வால்பாறை தொகுதியில் 1 சுயேச்சை உள்பட 6 போ் இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா். இவா்களில் 5 ஆண்கள், 1 பெண். 10 தொகுதிகளிலும் 11 பெண்கள், 126 ஆண்கள் என மொத்தம் 137 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...