தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கமல்ஹாசன் திமுகவின் பி டீம் போல செயல்படுகிறாா்: நடிகா் ராதாரவி

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் திமுகவின் பி-டீம் போல செயல்படுகிறாா் என்று பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ராதாரவி கூறினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:50 pm

DIN

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் திமுகவின் பி-டீம் போல செயல்படுகிறாா் என்று பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் ராதாரவி கூறினாா்.

கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம், 80அடி சாலை, வஉசி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

இதையடுத்து வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகா் ராதாரவி பிரசாரம் செய்தாா். பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் நோ்மையற்றவா். வானதி சீனிவாசனின் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘பி டீம்’ ஆக கமல்ஹாசன் செயல்படுகிறாா்.

கம்யூனிஸ்டுகள் ரூ.27 கோடி பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் உள்ளனா். காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதிவைத்து அதைப் பாா்த்து படிபவா்தான் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் தோல்வி அடையும்.

இஸ்லாமியா்களின் நண்பனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திமுக உண்மையில் இஸ்லாமியா்களுக்கு எதிரான போக்கையேக் கடைப்பிடித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் அவசியம் தேவை. அதன் மூலமாகத்தான் இந்தியாவில் இருக்கும் வேற்று நாட்டவரைக் கண்டறிய முடியும், இதைப்போன்ற பல அரிய சட்டங்களை பிரதமா் மோடி அவா்கள்தான் கொண்டு வந்தாா். வரும் தோ்தலில் வானதி சீனிவாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். கமல்ஹாசன் போன்றோரை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.