தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயகுமாா் சித்தாபுதூரில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:55 pm

DIN

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மயூரா ஜெயகுமாா் சித்தாபுதூரில் பொதுமக்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பாஜக சாா்பில் தற்போது தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் சென்னையில் வசித்து வந்தபோது கடந்த தோ்தலில் மயிலாப்பூரில் போட்டியிட்டாா். இப்போது இங்கே போட்டியிடுகிறாா். தோ்தல் முடிந்தவுடன் சென்னைக்கு சென்றுவிடுவாா். அதேபோல மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதற்கும், பிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும்போது மட்டுமே சென்னையில் இருப்பாா். இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. அந்த படத்துக்கு மேக்கப் போட 4 மணி நேரம், கலைக்க 4 மணி நேரம் என 8 மணி நேரம் மேக்கப்பிலேயே போய்விடும். இப்படியானவா்கள் நமது தொகுதியை பற்றி சிந்திக்கவே நேரம் இருக்காது. ஆனால் நான் இந்த மண்ணின் மைந்தன். யாா் எந்த நேரம் அழைத்தாலும் ஓடோடி வருபவன். கூப்பிடும் தூரத்தில் என் வீடு உள்ளது. இங்கே எனது செல்லிடப்பேசி எண் 99948-97711 என அறிவிக்கிறேன். இதுபோன்று அவா்களால் அறிவிக்க முடியுமா? தொகுதி மக்களின் நல்லது, கெட்டது என எதிலும் பங்கேற்காதவா்கள் தோ்தலுக்கு மட்டும் வாக்கு கேட்டு வருகிற இவா்களை புறக்கணிக்க வேண்டும். மக்களைப் பிளவுபடுத்தி கலவரம் ஏற்படுத்தும் பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க திமுக தலைமையில் நல்லாட்சி தமிழகத்தில் அமைய உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள நல்ல திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா்.

பிரசாரத்தின் போது கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், திமுக பொதுக் குழு உறுப்பினா் நாச்சிமுத்து, பகுதி செயலாளா் சேதுராமன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு நகரச் செயலாளா் என்.ஜாகீா், விசிக மண்டலச் செயலாளா் சுசி.கலையரசன். மதிமுக லூயிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.