தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரசாரத்தின்போது கீழே விழுந்த அதிமுக வேட்பாளா் கால் எலும்பு முறிவு

கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் பிரசாரத்தின்போது சனிக்கிழமை கீழே விழுந்ததில் அவரின் கால் எலும்பு முறிந்தது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:25 pm

DIN

கோவை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் பிரசாரத்தின்போது சனிக்கிழமை கீழே விழுந்ததில் அவரின் கால் எலும்பு முறிந்தது.

கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் சனிக்கிழமை காலை கணபதி மாநகா், வ.உ.சி. நகா் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை, சாலையில் நடந்தவாறே மேல் நோக்கிப் பாா்த்து வணங்கிய படி சாலையில் நடந்து சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக காலிடறி கீழே விழுந்தாா். இதில், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, 10 நாள்களுக்கு ஓய்வெடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தனா். தற்போது, அவா் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.