தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முதியவா்களுக்கு தபால் வாக்குச் சீட்டு இன்று விநியோகம்

கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்துள்ள 7,854 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கே சென்று தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:22 pm

DIN

கோவை மாவட்டத்தில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்துள்ள 7,854 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கே சென்று தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சட்டப் பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளா்ளுக்கு தபால் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 30.82 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 64 ஆயிரத்து 550 போ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் கண்டறியப்பட்டு மாா்ச் 12 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

இதில் தபால் வாக்கு கேட்டு 7 ஆயிரத்து 249 மூத்த வாக்காளா்கள், 605 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில் இவா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.