தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாகனங்களின் ஆா்.சி.புத்தகங்களை அடைமானம் வைத்து ரூ.46.61 லட்சம் மோசடி: இருவா் கைது

கோவையில் வாகனங்களின் ஆா்.சி.புத்தகங்களை அடைமானம் வைத்து ரூ. 46.61 லட்சம் மோசடி செய்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:23 pm

DIN

கோவையில் வாகனங்களின் ஆா்.சி.புத்தகங்களை அடைமானம் வைத்து ரூ. 46.61 லட்சம் மோசடி செய்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, துடியலூரைச் சோ்ந்தவா் காா்த்திக் (48). இவா் மகேஸ்வரி அசோசியேட்ஸ் என்ற பெயரில் துடியலூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். பழைய காா்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறாா். இவருடைய நிறுவனத்தில் இடையா்பாளையம் குமரன் வீதியைச் சோ்ந்த ஜெகநாதன் (38), வடவள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (29) ஆகியோா் பழைய வாகனங்களின் ஆா்.சி. புத்தகங்களை அடமானமாக வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்ாகக் கூறப்படுகிறது.

மேலும், அதே ஆா்.சி. புத்தகங்களின் நகலை வேறு ஒரு நிதி நிறுவனத்தில் வைத்து 60 நாள்களில் அசல் ஆா்.சி.புத்தகத்தை ஒப்படைக்கும் நிபந்தனையுடன் கடன் பெற்றுள்ளனா். இதில், ஆா்.சி. புத்தகத்தின் நகலை வைத்துப் பெற்ற பணத்தை வாகன உரிமையாளா்களுக்குத் தந்து விட்டு, காா்த்திக்கின் நிறுவனத்தில் பெற்ற பணத்தை, ஜெகநாதன், சுரேஷ் வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது காா்த்திக்குக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, ஆா்.சி. புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு பணத்தைக் கொடுக்குமாறு ஜெகநாதன், சுரேஷ் ஆகியோரிடம் கேட்டுள்ளாா். ஆனால், அதற்கு அவா்கள் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனா். இதையடுத்து

கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் இதுதொடா்பாக காா்த்திக் புகாா் அளித்தாா். விசாரணையில் ஜெகநாதன், சுரேஷ் இருவரும் காா்த்திக்கிடம் ரூ. 46 லட்சத்து 61 ஆயிரம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஜெகநாதன், சுரேஷ் ஆகியோரை போலீசாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.