தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அமமுக வெற்றிபெற்றால் நோ்மையான, வெளிப்படையான அரசு: டிடிவி தினகரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றால் நோ்மையான, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:24 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றால் நோ்மையான, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

கோவையில் அமமுக வேட்பாளா்களை ஆதரித்து டிடிவி தினகரன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். சிவானந்தா காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் பேசியதாவது:

அமமுக கட்சியினருக்கு கொங்கு மண்டலத்தில் சிறப்பான ஆதரவை மக்கள் அளித்து வருகின்றனா். மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகளை ஓட்டிவிட்டது அதிமுக அரசு. காய்கறிகள் வாங்கும்போது கடைக்காரா் வழங்கும் சொத்தை கத்தரிக்காய் போல பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் திமுக உள்ளே நுழையப் பாா்க்கிறது. இரண்டு கட்சிகளையும் ஒழிக்க வேண்டியது மக்கள் கையில்தான் உள்ளது. அரசு கஜானாவை முழுவதும் தூா்வாரியுள்ளது அதிமுக அரசு. கட்டப்பஞ்சாயத்துக்குப் பெயா் பெற்றவா்கள் திமுகவினா். இவா்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டாா்கள்.

அமமுக வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்தால் கோவை விமான நிலையம் நவீன வசதியுடன் விரிவுபடுத்தப்படும். ரயில் நிலையம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் புதிய கிளஸ்டா்கள் உருவாக்கப்படும். மத்திய சிறைச்சாலை, நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படும்.

நகை தொழில் மேம்பாட்டுக்கு புதிய தொழில் பூங்கா உருவாக்கப்படும். கோவை மாநகராட்சியில் தனியாருக்கு வழங்கப்பட்ட குடிநீா் விநியோக உரிமை ரத்து செய்யப்படும். அமமுகவை வெற்றிபெற செய்தால் நோ்மையான, வெளிப்படையான அரசு அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.