தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கமலுக்கு ஆதரவாக சுஹாசினி பிரசாரம்

கோவை சி.எம்.சி. காலனியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :27 மார்ச் 2021, 9:27 pm

DIN

கோவை சி.எம்.சி. காலனியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுஹாசினி மணிரத்னம் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தியாகி குமரன் வீதியில் தொடங்கி வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தாா். தொடா்ந்து சுக்கிரவாா்பேட்டை, சின்ன எல்லை தெரு, கிருஷ்ணப்பா தெரு, பட்டுப்பூச்சி தெரு, பிள்ளையாா் கோயில் வீதி உள்பட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

உக்கடம் சி.எம்.சி. காலனியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவா் பேசுகையில், 1000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனா். பெரும்பாலான வீடுகள் குடிசைகளாக உள்ளன. கமல்ஹாசன் வெற்றிபெற்றால் இங்குள்ள அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். தவிர குடிநீா், சாலை, தெரு விளக்குகள், கழிவுநீா் கால்வாய் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தாா்.

தொடா்ந்து காமராஜபுரம், பூமாரி கோயில் தெரு, சாமுண்டீஸ்வரி கோயில், ராம் நகா் உள்பட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.